ஒரு பறவையின் முதலிரவு
ஒரு பறவையின் முதலிரவு எப்படி இருக்கும்
புரோகிதர் உண்டா பறவையின் ஜாதியில்
நாள் குறித்து சாந்தி முகூர்த்தம் பண்ண
மார்பினை உறுத்தும் மஞ்சள் கயிறு இராது
ஏனெனில்
அது மானுடற்கான காதல் விலங்கு
தோழன் அல்லது தோழி இருப்பார்களா
காமச் சீண்டலில் காட்டைக் கலகலப்பாக்க
எதனால் அமைந்திருக்கும் கட்டில்
பழங்கள்
சலித்திருக்கும்
எதை உண்டு சரிகட்டி வெல்லும்
வாயில்
மட்டுமா
இல்லையே
கட்டாயம்
பெண் பறவை சூடாது மல்லிகை
ஆடைகள்
கசங்க வாய்ப்பு இல்லை
புறமிருந்து
புணர்வதால்
வியர்க்குமா? வியர்வைதான் நாறுமா?
காமத்திலிருந்து
காதலுக்கு வருமா
காதலிலிருந்து காமத்திற்குப் போகுமா?
நிச்சயம் ஏமாற்றம் வந்திருக்காது
அடுத்த
தேதி குறிக்காது விலகும் அதன் உடல்
பின் அவ்வப் போது தென்படும்
எவனோ எவளோ தான் இரண்டாம்
மூன்றாம் இரவுகளுக்கு
ஏனெனில்
யாருக்கு யாரும் கணவன் இல்லை
யாருக்கும்
யாரும் மனைவி இல்லை
(நன்றி - உயிர் எழுத்து
)
ஜெயதேவன்
No comments:
Post a Comment